இலங்கையின் முன்னணியில் உள்ள பல்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare நிறுவனம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் Siemens Healthineers 3 Tesla MRI ஸ்கேனருக்கு, மேலதிக கணினி தரவுப் பகுப்பாய்வு தொகுதியை (Workstation) நன்கொடையாக வழங்கியுள்ளது. MRI அறிக்கைகளைப் பெறுவதற்கும், இதன் மூலம் நோயறிதல் செயன்முறையை விரைவுபடுத்துவதற்கும், உடனடியாக சிகிச்சையைத் திட்டமிடுவதற்கும் இது மிகவும் உதவியாக அமையும்.DIMO Healthcare நிறுவனம் 2020 இல் யாழ். போதனா வைத்தியசாலையில் Siemens Healthineers 3 Tesla MRI ஸ்கேனரை நிறுவியது. யாழ். மாவட்டத்தின் பொதுச் சுகாதார சேவை கட்டமைப்பில் உள்ள ஒரேயொரு MRI ஸ்கேன் இயந்திரமான இது பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குகிறது.நோயறிதல் செயன்முறையை விரைவுபடுத்துமாறு யாழ். போதனா வைத்தியசாலையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, மருத்துவமனையின் MRI ஸ்கேன் இயந்திரத்திற்காக இந்த மேலதிக கணினி தரவு பகுப்பாய்வு தொகுதியை (Workstation) DIMO Healthcare வழங்கியது.
இந்த மேலதிக கணினி தரவு பகுப்பாய்வு தொகுதியானது, யாழ். போதனா வைத்தியசாலைக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இதன் முதலாவது நன்மையானது, MRI அறிக்கைகளைப் பெறுவதை விரைவுபடுத்துவதும், நோயறிதலை மிகவும் திறம்படச் செய்வதும், அதன் மூலம் விரைவான சிகிச்சை திட்டமிடலை மேற்கொள்ள உதவுவதும் ஆகும். இதன் இரண்டாவது நன்மையானது, விரிவாக்கப்பட்ட தரவுப் பகுப்பாய்வு திறன், நோய்களைப் பற்றிய விரிவான ஆய்வை நடத்துவதற்கு மருத்துவர்களுக்கு மேம்பட்ட பயிற்சிக்கான சூழலை உருவாக்கியுள்ளது.