உளவியல் பாட நெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூர Iconic Awards Sri Lanka – 2024 விருதினை பெற்றுக்கொண்டது.
குறித்த நிகழ்வுகள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ( BMICH) அண்மையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிறுவனத்துக்கான விருதினை அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் பெற்றுக்கொண்டார்.விருதினை பெற்றுக்கொண்ட அவர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
“அமேசான் கல்லூரி நிறுவனமானது 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சுமார் 15 வருடங்களாக பல கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதுடன், மாணவர்களின் நன்மையை கருத்தில் கொண்டு பல்வேறுபட்ட புலமைப்பரிசில் திட்டங்கள் மற்றும் வறிய மாணவர்களுக்கான சலுகை அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள பல வழிவகைகளை ஒழுங்குபடுத்தி கொடுக்கின்றன. அமேசான் கல்லூரி Diploma, HND, Degree, Masters, PhD வரையிலான பாட நெறிகளுடன்,Business Management, Psychology, Counselling, Teacher Training, Caregiver, Childcare, IELTS, English போன்ற பாடநெறிகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் வகுப்புகள் நடத்தப்படுகிறது.