சுவதிவிய என்பது இலங்கையில் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்காக சுகாதாரத்துறையின் பல்வேறு உறுப்பினர்களை – மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள், உடற் பயிற்சியாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டு நிபுணர்கள் உட்பட அனைவரையும் ஒன்றிணைக்கும் ஓர் இலாப நோக்கமற்ற முயற்சியாகும். நிறுவனத் துறையின் முக்கிய பங்கை வலியுறுத்தும் சுவதிவிய, வணிக நிறுவனங்கள் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்குமாறு அழைப்பு விடுக்கிறது. மேலும் கல்வி நிறுவனங்கள், சுகாதார சேவை வழங்குநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசு நிறுவனங்கள், உணவுத் தொழில் மற்றும் ஊடகங்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஏனைய தெற்காசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கையில் நீரிழிவு நோயின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த நிலைமை மிகவும் கவலையளிப்பதாகவும், உடனடி கவனம் தேவைப்படுவதாகவும் உள்ளது.
சுமார் 4, வயதுவந்த இலங்கையர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது ஒரு குறிப்பிடத்தக்க சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சுமார் 30 சதவீதம் பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதை அறியாமலேயே இருக்கின்றனர்.