இலங்கையர்களுக்கு உயர்தர சர்வதேச சுகாதார சேவைகளை வழங்கும் நவலோக்க மருத்துவமனைகள் குழுமம், விசேட எலும்பு மச்சை மாற்று சிகிச்சை பிரிவை நவீனமயப்படுத்தி அண்மையில் மீண்டும் திறந்து வைத்துள்ளது. இரத்த புற்றுநோய் மற்றும் தலிசீமியா போன்ற இரத்த சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நிறுவப்பட்டது, அந்த நோய்களுக்கான வெற்றிகரமான சிகிச்சை முறையான எலும்பு மச்சை அல்லது ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
செப்டெம்பர் 2014 முதல் செயல்படும், BMTU அலகு விரிவான எலும்பு மச்சை மாற்று சிகிச்சை சேவைகளை வழங்க நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகளைப் பயன்படுத்துகிறது. எலும்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்புப் பயிற்சி பெற்ற திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த சுகாதார நிபுணர்களின் குழுவையும் கொண்டுள்ளது. அவர்கள் நோயாளியின் முதன்மை பராமரிப்பு மருத்துவர் மற்றும் பிற நிபுணர்களுடன் இணைந்து ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு ஒரு சிகிச்சையளிப்பு முறையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இது 3 தனித்தனி தீவிர சிகிச்சை பிரிவுகளையும் கொண்டுள்ளது மற்றும் ஒவ்வொரு அலகும் HEPA-filters எனப்படும் காற்று வடிகட்டுதல் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் மூலம் உயர் காற்றின் தரத்தை உறுதி செய்து நோய்த்தொற்றுகளைக் குறைக்கும் வகையில் செயல்படுவதால், அலகின் சுகாதாரம் மேலும் அதிகரித்து வருகிறது.
இங்கு, எலும்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கவும் பலதரப்பட்ட சுகாதார ஆலோசனைக் குழு செயல்படுகிறது.
அதன் மூலம், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மன வலிமையை வழங்க அவர்கள் பணியாற்றுகிறார்கள், மேலும் நோயாளிக்கு குணப்படுத்தும் செயல்முறையைப் பற்றி கற்பிக்கவும் செய்கிறார்கள்.நவலோக்க எலும்பு மச்சை மாற்று அலகு இலங்கையில் முன்னணி எலும்பு மச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அலகு ஆகும். இரத்த புற்றுநோய் மற்றும் பிற இரத்தக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் உயர் வசதிகள் மற்றும் கவனிப்புடன் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கையைப் பெற முடியும்.