Wednesday, September 11, 2024
Home » Laugfs எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

Laugfs எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

- மாதாந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படாது

by Prashahini
September 4, 2024 4:56 pm 0 comment

மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய Laugfs சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் இன்று (04) தெரிவித்துள்ளார்.

தற்போது, Laugfs சமையல் எரிவாயு 12.5kg: ரூ. 3,680 இற்கும், 5kg: ரூ. 1,477 இற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) செப்டம்பர் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x