ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று (04) ஆரம்பமாகியது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் தமது தபால் வாக்குகளை அளித்துவருகின்றனர்.
இதேவேளை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் அலுவலகம், விசேட அதிரடிப்படை முகாம் மற்றும் மாவட்டத்தின் நட்டாங்கண்டன்டல், மல்லாவி, ஐயன்கன்குளம், மாங்குளம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ,முள்ளியவளை, முல்லைத்தீவு, கொக்கிளாய், வெலிஓயா ஆகிய பத்து பொலிஸ் நிலையங்கள் என பதின்மூன்று வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று தமது தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 3566 பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாங்குளம் குறூப் நிருபர்