Home » முப்படையினருக்கான சம்பள உயர்வும் அறிவிப்பு

முப்படையினருக்கான சம்பள உயர்வும் அறிவிப்பு

- ஜெனரல், அட்மிரல், எயார் ஷீப் மார்ஷலுக்கு ரூ. 84,700 அதிகரிப்பு

by Prashahini
September 4, 2024 11:22 am 0 comment

2025 ஜனவரி 01 முதல் அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உயர்த்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையின்படி, முப்படைகளிலும் பணியாற்றும் உறுப்பினர்களின் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி முப்படைகளின் தரம் III நிலை சாதாரண சிப்பாய்களினதும் அடிப்படைச் சம்பளம் 10,660 ரூபாவினாலும், தரம் II க்கு 10,960 ரூபாவினாலும் தரம் I இற்கு 11,260 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

லான்ஸ் கோப்ரல்/சார்ஜென்ட்/ ஏயார்மேன் பதவி நிலைகளின் தரம் III க்கு 11,560 ரூபாவினாலும் தரம் IIக்கு 11,860 ரூபாவினாலும் தரம் I க்கு 12,160 ரூபாவினாலும் அடிப்படை சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். அதன் விசேட தரச் சேவைக்கு அடிப்படை சம்பளம் 12,460 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

கோப்ரல் / நாயக நெவி / கோப்ரல் பதவிகளில் தரம் III க்கு 12,460 ரூபாவினாலும் தரம் II க்கு 12,760 ரூபாவினாலும் தரம் ஒன்றுக்கு 13,130 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு அடிப்படைச் சம்பளம் 13,500 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

சார்ஜென்ட் / சாதாரண நிலை அதிகாரி / சார்ஜென்ட் பதவிகளில் தரம் III க்கு 13,500 ரூபாவினாலும், தரம் II க்கு 13,870 ரூபாவினாலும், தரம் I க்கு 14,240 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு 14,610 ரூபாவினாலும் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

ஸ்டாப் சார்ஜென்ட்/ சாதாரண அதிகாரி/ பதவி நிலை சார்ஜென்ட் ஆகிய பதவிகளின் தரம் III க்கு 14,610 ரூபாவினாலும் தரம் IIக்கு 14,240 ரூபாவினாலும் தரம் I க்கு 15,105 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு 15,600 ரூபாவினாலும் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

அதிகார ஆணையிடும் அதிகாரி II / தலைமை அதிகார அதிகாரி / ஆணையிடும் அதிகாரி பதவிகளின் தரம் III க்கு 16,095 ரூபாவினாலும், தரம் II க்கு 16,590 ரூபாவினாலும் தரம் I க்கு 17,085 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு 17,580 ரூபாவினாலும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆணையிடப்பட்டும் அதிகாரி I / இடைநிலை அதிகாரிகள் /தலைமை தலைமை பதவிகளின், தரம் III க்கு 19,725 ரூபாவினாலும், தரம் II க்கு 20,385 ரூபாவினாலும் தரம் I க்கு 21,045 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு அடிப்படை சம்பளம் 21,705 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

கெடட் அதிகாரிகளின் அடிப்படை சம்பளம் 13,500 ரூபாவினாலும், இடைநிலை அதிகாரிகளின் அடிப்படைச் சம்பளம் 13,870 ரூபாவினாலும் 2 ஆவது லெப்டினன்ட் (கெடட்) / ப்ளைட் அதிகாரி (கெடட்) பதவிகளின் அடிப்படை சம்பளம் 19,725 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

2ஆவது லெப்டினன்ட் (கெடட் அல்லாதவர்) / ப்ளைட் அதிகாரி (கெடட் அல்லாதவர்) பதவிகளின் அடிப்படை சம்பளம் 23,025 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

லெப்டினன்ட் / உப லெப்டினன்ட் / ப்ளைட் அதிகாரி பதவிகளின் அடிப்படை சம்பளம் 28,855 ரூபாவினாலும் எக்யூப்மென்ட் கண்ட்ரோலர் பதவிக்கான அடிப்படை சம்பளம் 30,220 ரூபாவினாலும் கெப்டன் / லெப்டினன்ட் / ப்ளைட் லெப்டினன்ட் பதவிகளுக்கான அடிப்படை சம்பளம் 37,045 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

மேஜர் / லெப்டினன்ட் கொமாண்டர் / ஸ்கொட்ரன் லீடர் பதவிக்கான அடிப்படை சம்பளம் 42,505 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

லெப்டினன்ட் கேர்ணல் / கொமாண்டர் / விங் கொமாண்டர் பதவிக்கான அடிப்படை சமபளம் 44,175 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

கேணல்/கெப்டன்/குரூப் கெப்டன் பதவிக்கான அடிப்படை சம்பளம் 58,095 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

பிரிகேடியர் / கொமாண்டர்/ எயார் கொமாண்டர் பதவிகளுக்கு அடிப்படை சம்பளம் 62,555 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் / ரியர் அட்மிரல் / எயார் வைஸ் மார்ஷல் பதவிகளுக்கான அடிப்படை சம்பளமம் 71,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

லெப்டினன்ட் ஜெனரல் / வைஸ் அட்மிரல் / எயார் மார்ஷல் பதவிக்கான அடிப்படை சம்பளம் 76,300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் / அட்மிரல் / எயார் ஷீப் மார்ஷல் பதவிக்கான அடிப்படை சம்பளம் 84,700 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x