நாட்டை மீட்டெடுப்பதற்குரிய பொருளாதார யுத்தத்தில் அரசாங்க ஊழியர்களின் பங்களிப்பு அளப்பரியது. எனவே, எதிரணிகளின் போலியான வார்த்தைகளுக்கு மயங்கி வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை அரசாங்க ஊழியர்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது.
அவ்வாறு பயன்படுத்தினால் எமது நாட்டை கடவுளால்கூட காப்பாற்ற முடியாமல் போய்விடுமென கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
நெருக்கடியான காலகட்டத்தில்கூட அரசாங்க ஊழியருக்கு சம்பள உயர்வுகளை வழங்கி, 2025 ஆம் ஆண்டு முதல் நிலையான சம்பள உயர்வு திட்டத்தை முன்வைத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டமே நடைமுறைக்கு சாத்தியம் என்பதை அரசாங்க ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.