Home » நவீனமயமாக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும்
எதிர்வரும் ஒக்டோபர் முதல்

நவீனமயமாக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும்

by mahesh
September 4, 2024 7:45 am 0 comment

நவீனமயமாக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் ஒக்டோபர் மாதம் முதல் குறைந்த கட்டணத்தில் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (03) தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(03) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது இதனை தெரிவித்த அவர், நீண்ட காலமாக கடவுச்சீட்டுகள் வழங்கிய நிறுவனம் அல்லாத வேறு நிறுவனத்திடம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கடவுச்சீட்டு பெறுவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின்படி, டெண்டர் அழைப்புகள் மற்றும் கொள்முதல் செயல்முறைகள் மிகவும் வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டும். எனவே நீண்ட காலமாக கடவுச்சீட்டை வழங்கிய நிறுவனத்தைத் தவிர வேறு நிறுவனத்திடமிருந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கடவுச்சீட்டைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x