159
ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அறிவியல் துறையில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7,500 ஆசிரியர்களை 03 கட்டங்களின் கீழ் Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தின் மூலம் பயிற்றுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.