Monday, October 7, 2024
Home » கம் உதாவ திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பேன்

கம் உதாவ திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பேன்

- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

by mahesh
September 4, 2024 8:00 am 0 comment

“நான் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் கம் உதாவ திட்டத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக பெருந்தொகையான வீடுகளை நிர்மாணித்து கொடுத்தோம். கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்ததும் இந்த வீடமைப்புத் திட்ட செயற்பாடுகளை நிறுத்தினார். நான் அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி செயல்படுத்துவதோடு, வீடில்லாதவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து வீட்டுப் பிரச்சினை உள்ளவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்” என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளி கிராமத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

“கம் உதாவ வேலைத்திட்டத்தின் மூலமே பரந்தளவில் வீடமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி அவர்கள் 10 இலட்சம் வீடுகளையும் 15 இலட்சம் வீட்டு வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்த போது, அரசாங்கத்தின் வருமானம் உயர்ந்து காணப்பட்டது. அந்தக் காலத்தில் தேசிய உற்பத்தி 21% காணப்பட்டிருந்தது. தற்பொழுது அது பத்து வீதமாகக் குறைந்து இருக்கின்றது. எனவே இந்த வேலைத்திட்டங்களை அரசாங்கத்தின் நிதியினூடாக மாத்திரம் முன்னெடுக்க முடியாது. எனவே புதிய வழிமுறைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும்” என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். “இது இலகுவான காரியம் அல்ல. ஆனாலும் அந்தச் சவாலை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நாட்டில் வீடமைப்பு வேலைத்திட்டத்தை தான் அதிகாரத்திற்கு வந்த உடனே ஆரம்பிப்பேன். உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு மீண்டும் ஒருமுறை கம் உதாவ யுகத்தை உருவாக்குவேன்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x