ஜப்பானின் யொகொஹாமா நகரில் பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்காக உயர்ந்த கட்டடம் ஒன்றில் இருந்து குதித்தபோது பாதசாரி மீது விழுந்து அந்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
பாடசாலை மாணவியான 17 வயதுப் பெண் கூட்ட நெரிசல் மிக்க வர்த்தக மைய கட்டடம் ஒன்றில் இருந்து குதித்தபோது, தமது நண்பிகளுடன் வீதியில் சென்றுகொண்டிருந்த 32 வயது பெண் மீது விழுந்துள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரும் மருத்துவமனைக்கு உடன் அழைத்துச் செய்யப்பட்டபோதும் அவர்கள் உயிர்தப்பவில்லை. இதேபோன்று 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் 17 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்ய மாடியில் இருந்து குதித்தபோதும் 19 வயது மாணவி ஒருவர் மீது விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு வேறு எந்த நாட்களை விடவும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டில் பாடசாலை பிரச்சினைகளுடன் தொடர்புபட்டு ஜப்பானில் 513 சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.