மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதான வீதியில் கடந்த 30 ஆம் மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சித்தாண்டி பகுதியை சேர்ந்த 66 வயதுடைய கனகசபை துளசிமணி எனும் வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சித்தாண்டி, சிறுவர் இல்லத்தில் சமையல் வேலை செய்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாவடிவேம்பு, மணிவாசகர் வீதியிலிருக்கும் தனது பேத்தியின் வீட்டுக்கு சென்று, தனது வீட்டுக்கு செல்ல பிரதான வீதியை கடக்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. செங்கலடியிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த சிறிய ரக லொறி மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம் எஸ்.எம்.நஸீர், விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)