தலைநகரில் இளம் கலை, இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த 44 ஆண்டுகளாக கலை இலக்கியப் பணியாற்றிவரும் புதிய அலை கலை வட்டம் இவ்வாண்டில் பயிலரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடிப்பு பயிலரங்கம் மற்றும் மேடை, தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க விரும்பும் ஆர்வலர்களை தேர்வு செய்யும் நிகழ்வை நடத்த உள்ளது.
இந்த ஒரு நாள் கருத்தரங்கில் பங்கு கொண்டு தமது நடிப்பு திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் நடிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெறவும் விரும்புவோர் உடன் இல.075 4880172 என்ற வட்சப் இலக்கத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.