Home » எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல்; மூவர் வைத்தியசாலையில் அனுமதி

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல்; மூவர் வைத்தியசாலையில் அனுமதி

by Gayan Abeykoon
September 3, 2024 1:00 am 0 comment

வவுனியா, பண்டார வன்னியன் சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு 12:15 மணியளவில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த மூவர் அடங்கிய குழுவினர் அங்கு கடமையில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றுமுன்தினம் (01.09) இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் திடீரென அவர்களில் ஒருவர் அங்கு வேறு கடமையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல் நடத்தினார்.

இதன்போது போக்குவரத்து பொலிஸார் இருவர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை தடுப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த மற்றைய ஊழியர் சென்ற போது அவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு முச்சக்கரவண்டியில் பொலிஸார் வருகை தந்த போது தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x