Home » ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

by Gayan Abeykoon
September 3, 2024 1:06 am 0 comment

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது , மறைந்த ஊடகவியலாளரின் உருவப்படத்திற்கு யாழ்.ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வக்குமார் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஈகைச்சுடரினை யாழ்.தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் த.வினோஜித் ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்பட்டதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2021 செப்டெ ம்பர் 2ம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.

(யாழ். விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x