Monday, October 7, 2024
Home » இலங்கைக்கு கடத்த முயன்ற பலகோடி ரூபா மதிப்பிலான போதைப்பொருள் மீட்பு

இலங்கைக்கு கடத்த முயன்ற பலகோடி ரூபா மதிப்பிலான போதைப்பொருள் மீட்பு

by Gayan Abeykoon
September 3, 2024 4:39 am 0 comment

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்படவிருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதை பொருள் கியூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் சர்வதேச மதிப்பு ரூ.29 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கஞ்சா, பீடி இலைகள், களைக்கொல்லி மருந்து, வலி நிவாரண மாத்திரைகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருகிறது.

கடத்தலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கியூ பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (2)  தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் ‘சாரஸ்’ என்ற அதிநவீன போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூ பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையில் பொலிஸார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  இப்போது அங்கிருந்த படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதை பொருள் கியூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி சவேரியார் புரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் உட்பட  3 பேரை பிடித்து கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கியூ பிரிவு பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் கஞ்சாவை உருக்கி ஒரு கிலோ சாரஸ் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக தூத்துக்குடியிலிருந்து போதைப்பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது வழக்கமாக நடந்து கொண்டிருந்தாலும் தற்போதைய இந்த கடத்தல் மிகப்பெரிய அளவில் பார்க்கப்படுகிறது.

(மன்னார் குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x