Wednesday, September 11, 2024
Home » அரச ஊழியர் சம்பளம், சலுகைகள் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அக்கறை செலுத்தாதது ஏன்?

அரச ஊழியர் சம்பளம், சலுகைகள் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அக்கறை செலுத்தாதது ஏன்?

by Gayan Abeykoon
September 3, 2024 4:00 am 0 comment

ூ ன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரச ஊழியர்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய கொள்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டில் மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில், அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் அணுகுமுறைகளை இனங்கண்டு கொள்வது மிகவும் அவசியமானதாகும். அதற்குக் காரணம் என்ன முடிவெடுப்பது என்பதைத் தீர்மானிப்பதில் அந்தத் தகவல் அவர்களுக்கு முக்கியமானது.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் தனது கொள்கைகளில் மிகக்குறைந்த இடத்தையே வழங்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரச ஊழியர்களின் சம்பளம் மாதம் ஒருமுறை உயர்த்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்படவில்லை. அரச ஊழியர்களின் விஷயத்திலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை விலைச்சூத்திரம் அமுல்படுத்தப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், ஒன்று தெளிவாக உள்ளது. அதாவது அரச ஊழியர்களுக்கு போதியளவு சம்பள உயர்வை வழங்குவதில்லை. சம்பளத்தை அதிகரிப்பதற்கு பாரிய தொகை செலவாகும் என்பதால் இவ்வாறான அதிகரிப்பு நடைமுறைக்கு மாறானது என அனுரகுமார திசாநாயக்க பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இதிலிருந்து தேசிய மக்கள் சக்தியின் கீழ் அமைக்கப்படும் அரசாங்கம் ஊதியத்தை உயர்த்தாது என்பது தெளிவாகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, பல்வேறு துறைகளில் உள்ள அரச ஊழியர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை ஆரம்பித்தனர். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமித்தார். குழுவை நியமித்த ஜனாதிபதி, குழுவின் பரிந்துரைகளின்படி, 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு ஊதியங்கள் அதிகரிக்கப்படும் என அறிவித்தார்.

அந்தக் குழு ஒரு மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அனைத்து அரச ஊழியர்களுக்கும் ரூ.25,0000 மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.33,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அடுத்த வருடம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி, அன்று முதல் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.53,000 ஆகவும், அனைத்து அரசு ஊழியர்களின் சம்பளம் 24% முதல் 35% ஆகவும் உயரும்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் தனது ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புகளில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சம்பள உயர்வை அமுல்படுத்துவதாக பிரசுரங்களிலும் விளம்பரங்களிலும் பெரும் விளம்பரம் செய்துள்ளார். வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை ரூ.25,000 ஆகவும், அடிப்படைச் சம்பளத்தை ரூ.33,000 இனால் அதிகரிக்கவும், அரச சேவையின் அடிப்படை குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.55,000 வரை அதிகரிக்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதேபோன்ற புள்ளிவிபரங்களை முன்வைத்து சஜித் பிரேமதாசவும் அவ்வாறே சம்பள அதிகரிப்பை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரச உத்தியோகத்தர்கள் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார்கள் என்பது இரகசியமல்ல. பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்துக் கட்டணம் போன்றவற்றால், இவர்களைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. எனவே, இந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், அவர்களது வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். எனினும் வரலாறு முழுவதும் அரச ஊழியர்கள் மாத்திரமன்றி பொதுமக்களும் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளனர், மீண்டும் ஒருமுறை ஏமாறாதவாறு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அரச ஊழியர்களின் சம்பளம் ரூபா 10,000 இனால் அதிகரிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். இது இன்னும் ஒரு தேர்தல் வாக்குறுதி என்று பலர் நினைத்தனர். இருந்தும், அரச ஊழியர் ரணில் விக்கிரமசிங்கவை நம்பினர். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரச உத்தியோகத்தர்களுக்கு மகிந்த ராஜபக்ஷ மோட்டார் சைக்கிள்களை வழங்கினார். சம்பளத்துடன் இடைக்கால கொடுப்பனவு சேர்க்கப்பட்டது. 50,000 பட்டதாரிகளுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன. இருந்தும் அந்த அரச ஊழியர்கள் சொன்னதை மீறாத மனிதர் என்பதால்தான் ரணில் விக்கிரமசிங்கவை அப்போது நம்பினார்கள்.

மறுபுறம், அவர்கள் சம்பள உயர்வை இழந்தால், அது அவர்களின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும். அதுவரை அரசாங்க ஊழியர்கள் தமது பெரும்பான்மையான வாக்குகளை மகிந்த ராஜபக்ஷவுக்கே வழங்கினர், ஆனால் அது 2015 இல் மாறியது. ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதிகளை நிறைவேற்றினார். அரச ஊழியர்களுக்கு 2015- ஆம் ஆண்டு ரூ.10,000 சம்பள உயர்வு கிடைத்து 2016- ஆம் ஆண்டு முதல் பல படிகளின் கீழ் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க வழங்கிய சம்பள அதிகரிப்பினால் இன்று அரச ஊழியர் சம்பளத்தில் 60% இற்கும் அதிகமான தொகை சேர்க்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க நாடு வங்குரோத்து நிலையில் இருந்த வேளையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச உத்தியோகத்தரை கருத்தில் கொள்வதில் ஆர்வம் காட்டினார். 2024 ஆம் ஆண்டு சம்பளம் ரூ.10,000 – உயர்த்தப்பட்டு இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கவின் சம்பள அதிகரிப்புக்கு அமைவாக ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், ஏறக்குறைய ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் உயர் வருமானத்திற்கு உரித்துடையவர்களாக இருப்பார்கள். பல்வேறு அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் ஒவ்வொரு தரத்தினதும் ஆரம்ப சம்பளம் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பல கட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அலுவலக பணி உதவியாளர்/தரம் III ரூ.5450 அதிகரிக்கும்.

இரண்டாம் தரத்திற்கு 8760 ரூபாவும் முதலாம் தரத்திற்கு 10950 ரூபாவும் சம்பள உயர்வு வழங்கப்படும். விசேட தர சம்பளம் 13980 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் மூன்றாம் தர சம்பளம் 6960 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தர சம்பளம் 9990 ரூபாவும் முதலாம் தரத்தில் 13020 ரூபாவும் அதிகரிப்பு.

விசேட தரத்திற்கு 16340 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மூன்றாம் நிலை சம்பளம் 8340 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

இரண்டாம் தரம் 11690 ரூபாவும் முதலாம் தரம் 15685 ரூபாவும் சம்பளமாகப் பெறுகின்றன.

முகாமைத்துவ உதவியாளர் மூன்றாம் தரத்திற்கு 10140 ரூபாவாலும் இரண்டாம் தரத்திற்கு 13490 ரூபாவாலும் சம்பளம் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தரம் I சம்பளம் ரூ.17550 அதிகரிக்கும்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் மூன்றில் 12710 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கும். இரண்டாம் தரத்திற்கு 17820 ரூபாவும் முதலாம் தரத்திற்கு 25150 ரூபாவும் அதிகரிக்கப்படும்.

மூன்றாம் தரத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார பணியாளர்களுக்கு 12885 ரூபாவும் இரண்டாம் தரத்திற்கு 17945 ரூபாவும் முதலாம் தரத்திற்கு 25275 ரூபாவும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

கதிரியக்க நிபுணர் மற்றும் மருந்தாளர்கள் மூன்றாம் தரத்திற்கு 13280 ரூபா சம்பள அதிகரிப்பு.

இரண்டாம் தரத்திற்கு 18310 ரூபாவும் முதலாம் தரத்திற்கு 25720 ரூபாவும் சம்பளத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தாதிய உத்தியோகத்தர் தரம் III இன் சம்பளத்தை ரூ.13725 ஆகவும், தரம் IIக்கு ரூ.18835 ஆகவும், தரம் Iக்கு ரூ.26165 ஆகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தர அதிபருக்கு 23425 ரூபாவினால் சம்பளத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இரண்டாம் தரத்திற்கு 29935 ரூபாவாலும் மூன்றாம் தரத்திற்கு 39595 ரூபாவாலும் சம்பளம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் சேவையில் உள்ள கல்லூரி ஆசிரியர்களுக்கு 17480 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 19055 ரூபா சம்பள அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ளது.

இரண்டாம் தர அதிகரிப்பில் 20425. முதலாம் தரத்திற்கான சம்பளம் 38020 ரூபாவால் அதிகரிக்கப்படும்.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சம்பளத்தை 10704 ரூபாவினால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கான தொகை 13210 ரூபா. சப்-இன்ஸ்பெக்டர்களின் சம்பளம் 14050 ரூபாவால் அதிகரிக்கப்படும்.

பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் 18290 ரூபாவினாலும், பிரதான பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் 23685 ரூபாவினாலும் உயரும். கிராம உத்தியோகத்தர் முதலாம் தரத்திற்கு 11340 ரூபா சம்பளத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இரண்டாம் தரத்திற்கு 14690 ரூபாவும் முதலாம் தரத்திற்கு 18750 ரூபாவும் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. நிர்வாக கிராம அலுவலரின் சம்பளம் ரூ.23575 உயர்த்தப்படும்.

உதவி செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் உதவி ஆணையாளர்கள் ஆகியோரின் சம்பளம் ரூ.28885 உயர்த்தப்படும். பிரதி பணிப்பாளர் மற்றும் பிரதி ஆணையாளர்களின் ஆரம்ப சம்பளம் 43865 ரூபாவால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் பணிப்பாளர், ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்களின் சம்பளம் 57545 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆரம்ப வைத்தியர்களின் சம்பளம் 35560 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இரண்டாம் தர வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிக்க 39575 முன்மொழியப்பட்டுள்ளது.

முதலாம் தரத்திற்கான சம்பளத்தில் 53075 ரூபா அதிகரிப்பு.

மேலதிக செயலாளர் மற்றும் விசேட வைத்தியர்களின் சம்பளத்தை 70200 ரூபாவினால் அதிகரிக்க முன்மொழிவு.

அதேசமயம், அனைத்து சம்பள உயர்வு மதிப்புகளையும் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து அரச கூட்டுத்தாபனங்கள்/ சபைகள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆயுதப்படைகளின் சம்பளம் அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களுக்கு பல தெரிவுகள் இல்லை. ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை எந்த வகையிலும் நடைமுறைப்படுத்த முடியாது என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச அந்த முன்மொழிவை நகலெடுத்து தனது கொள்கைகளில் சேர்த்துள்ளார். 76 ஆண்டுகால தோல்வியடைந்த அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும் என சில வேட்பாளர்கள் கூறுகின்றனர். அதற்காகப் போராடிய இளைஞர்கள் போராட்டத்திற்குப் பிறகு எதிர்பாராத முடிவுகளை எப்படி அனுபவிக்க நேர்ந்தது என்பதை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

கோஷங்கள் அல்லது இனிமையான கதைகளுக்கு வாக்களிப்பது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஆனால், அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒவ்வொரு ஊழியரின் மொத்த சம்பளமும் குறைந்தபட்சம் ரூ. 5000 மாதாந்தம் அதிகரிக்கும், அது அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும். கோஷங்களுக்காக அதை இழக்க வேண்டுமா என்பதை ஒப்பிடுவது மிகவும் முக்கியம்

சம்பள உயர்வால் பயனடைவது தனிநபர் மட்டுமல்ல. அடிப்படை ஊதியம் அதிகரிக்க, அவரது ஓய்வூதியமும் அதிகரிக்கிறது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் குளிர்காலத்தை கழிப்பதற்கான கொடுப்பனவு அது. மேலும், அரசு ஊழியர்களின் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் அரசு ஊழியருக்குப் பிறகு பெறும் உதவித்தொகையும் அதிகரிக்கும். ஆகவே குடும்ப நலனுக்காக சிந்தித்து வாக்களிப்பதே உகந்ததாகும்.

 

மக்கள் நேசன்  

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x