புத்தளம் – எரம்புகொடல்ல மற்றும் கற்பிட்டி , கப்பலடி ஆகிய பகுதிகளில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் (31) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமேற்கு கட்டளையின் விஜய கடற்படையினர் புத்தளம் – எரம்புகொடல்ல களப்பு பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்துகொண்டிருந்த 4 உரமூடைகளை கைப்பற்றிய கடற்படையினர், அதனை சோதனை செய்தனர்.
இதன்போது குறித்த 4 உர மூடைகளில் இருந்து 169 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, கற்பிட்டி – கப்பலடி களப்பு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட மற்றுமொரு சோதனை நடவடிக்கையில் களப்பு பகுதியில் மிதந்துகொண்டிருந்த 5 உரமூடைகளை கைப்பற்றிய கடற்படையினர், அதனை சோதனைக்கு உட்படுத்தினர்.
குறித்த 5 உர மூடைகளில் இருந்து 176 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இரண்டு பிரதேசங்களிலும் ஒரே நாளில் கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது 5 உர மூடைகளிலும் 345 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்