239
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பிரபல மருந்தகமொன்றை உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்த நான்கரை இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 31 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மருந்தக உரிமையாளரால் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சாவகச்சேரி நகரப்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பகல் வேளையில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
(சாவகச்சேரி விசேட நிருபர்)