இலங்கை இளைஞர்களின் அதிர்வலை மற்றும் கேளிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்க பிறிமா கொத்துமீ ஒருபோதும் தவறுவதில்லை.
சர்வதேச சூப்பர் ஸ்டாரான யொஹானி மற்றும் பாடகர் அஷன்யா பிரேமதாச ஆகியோரை தனது வர்த்தகநாமத் தூதுவர்களாக இணைத்துள்ள பிறிமா கொத்துமீ, அவர்களுடனான கூட்டாண்மையை மேலும் நீடிப்பதாக அறிவித்துள்ளதன் மூலம், தனது தனித்துவமான ஆளுமையை வலுப்படுத்தியுள்ளது. பிறிமா கொத்துமீயின் Hot ‘N’ Spicy நாமத்தின் உணர்வை, முழுமையாக வெளிப்படுத்த இவர்களை விட சிறந்த ஜோடி இருக்கமாட்டார்கள்.
பிறிமா கொத்துமீயின் பரபரப்பான அடுத்த அத்தியாயமாக இணைகின்றார் கொலிவுட் இசை அரங்கில் அலைகளை உருவாக்கிய பிரபல இலங்கை கலைஞரான ரவி ரொய்ஸ்டர். Hot ‘N’ Spicy அதிர்வைப் போல் ரவி தனது இசையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறார்.
நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களை தைரியமாக முன்னோக்கி ச் செல்லச் செய்யவும், வாழ்க்கையின் வண்ணங்களை அனுபவிக்கவும் ஊக்கமளிக்கும் பிறிமா கொத்துமீ அதன் வர்த்தகநாம மந்திரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், உலகளாவிய நட்சத்திரங்களுடன் தொடர்ச்சியாக இணையும்.