தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (03) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றது.
தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான அவசியம், புறநிலை, முக்கியத்துவம் என்பவற்றையும் தமிழர்கள் தேசமாக தமது நிலைப்பாட்டினை அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் ஆணித்தரமாக வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா. அரியநேந்திரன் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினரால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
அந்நிலையில், பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (03) வெளியிடப்பட்டுள்ளது.
யாழ் . விசேட நிருபர்