292
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று (02) பி.ப. 4.30 மணி வரை பதிவான முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, நேற்றையதினம் (02) பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 129 ஆக பதிவாகியுள்ளது.
அந்த வகையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (02) வரை 2,098 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதில் தேர்தல் சட்டத்தினை மீறியமை தொடர்பில் தினமும் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதை குறித்த அறிக்கையில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
MR_PRE_2024_62_T