பாகிஸ்தான் தலிபானின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதலில் கைபர் பக்துன்ங்வா மாகாணத்தில் ஐவர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோத தலிபானின் கண்டபுர் மற்றும் மர்வட் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலிலேயே இந்த ஐவர் பலியாகியுள்ளனர்.
வங்கிகளுக்கு வேன்களில் எடுத்துச் செல்லும் பணத்தை கொள்ளையடித்து பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இம்மோதலுக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அத்தோடு இம்மோதலில் பயங்கரவாத செயற்பாடுகள் பலவற்றுடன் சம்பந்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இருவர்; கொல்லப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குழுக்களின் சட்ட விரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவென நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.