Monday, October 7, 2024
Home » மோட்டார் சைக்கிளிலிருந்து வீழ்ந்த பெண் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளிலிருந்து வீழ்ந்த பெண் உயிரிழப்பு

by Prashahini
September 2, 2024 12:49 pm 0 comment

செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த 63 வயதான மேரிரோசாரி ஈஸ்வரபாதம் என்பவராவார்.

நேற்று (01) காலை தேவாலயத்துக்கு சென்று விட்டு மகனுடன் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து தலையில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம்மரணம் தொடர்பில் இன்று (02) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டார்.

நாகர்கோவில் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x