Monday, October 7, 2024
Home » சென்னை – யாழ் இடையில் புதிய விமான சேவை

சென்னை – யாழ் இடையில் புதிய விமான சேவை

by Prashahini
September 2, 2024 1:58 pm 0 comment

சென்னைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இண்டிகோ (Indigo) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று (01) முதல் ஆரம்பமாகியுள்ளது.

சென்னையில் இருந்து நேற்று பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் பிற்பகல் 3.07 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதன்போது பயணிகளை வரவேற்கும் முகமாக மங்கள விளக்கு ஏற்றல், வரவேற்பு நடனம், நினைவுப் பரிசில்கள் வழங்கல், கேக் வெட்டுதல் மற்றும் விருந்தினர்களின் உரை என்பன இடம்பெற்றன.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்துகொண்டனர்.

சென்னைக்கும் , யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் இதுவரை காலமும், அலையன்ஸ் ஏர் (Alliance Air) விமான சேவை இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முதல் இண்டிகோ (Indigo) ஏர்லைன்ஸ் நிறுவனமும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

அதனால் சென்னைக்கும் , யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் நேற்று முதல் இரு விமான சேவைகள் நடைபெறுகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x