மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் லிட்ரோ விலை அதிகரிக்கப்படாது என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது, ஆனால், மக்கள் நட்பு நிறுவனம் என்ற வகையில், உள்நாட்டில் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு முடிவு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
உலகச் சந்தையில் விலை குறைவாக கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு வரவிருக்கிறது, எனவே தற்போது விலை திருத்தம் செய்யத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக கடந்த ஜூலை 03ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- 12.5kg: ரூ. 3,790 இலிருந்து ரூ. 3,690 ஆக ரூ. 100 இனால் குறைப்பு
- 5kg: ரூ. ரூ. 1,522 இலிருந்து ரூ. 1,482 ஆக ரூ. 40 இனால் குறைப்பு
- 2.3kg: ரூ. 712 இலிருந்து ரூ. 694 ஆக ரூ. 18 இனால் குறைப்பு