Home » டெஸ்ட் போட்டியில் 190 ஓட்டங்களால் இங்லாந்து அணி வெற்றி

டெஸ்ட் போட்டியில் 190 ஓட்டங்களால் இங்லாந்து அணி வெற்றி

- 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது

by Prashahini
September 1, 2024 10:10 pm 0 comment

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்லாந்து அணி 190 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் வெற்றி இலக்கை நோக்கி இன்று இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 58 ஓட்டங்களையும், அணித்தலைவர் தனன்ஜய டி சில்வா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் கஸ் அட்கின்சன் 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 251 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.

இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 196 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதன்படி 03 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x