திடீர் உடல்நல பாதிப்பினால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த வியாழக்கிழமை இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனை அடுத்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ் . விசேட நிருபர்