Tuesday, October 8, 2024
Home » கோட்டபாய ராஜபக்ஷவின் மோசமான ஆட்சியில் இந்த நாடு பாதிக்கப்பட்டது

கோட்டபாய ராஜபக்ஷவின் மோசமான ஆட்சியில் இந்த நாடு பாதிக்கப்பட்டது

- மீட்டெடுக்க தகுதியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்

by Prashahini
August 31, 2024 3:51 pm 0 comment

கோட்டபாய ராஜபக்ஷவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இந்த நாடும் மாவட்டமும் பாதிக்கப்பட்டது.

குறித்த நாட்டை முழுமையாக மீட்டெடுக்கவும்,மன்னார் மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் மக்கள் தகுதியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் பள்ளிமுனை வீதியில் இன்று (31) கட்சியின் தேர்தல் அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னாருக்கு விஜயம் செய்ய உள்ளார். மன்னார் மாவட்ட மக்கள் ஒன்று பட்டு அவறை வெற்றி பெறச் செய்ய இருக்கிறார்கள்.கத்தோலிக்க மக்கள் அதிகமாக இருக்கின்ற இந்த மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் இந்து மக்களும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்ற இந்த மாவட்டத்தில் சஜித் பிரேமதாசவின் வருகையை எதிர் பார்த்துள்ளனர்.

இந்த மாவட்டத்திலே பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகிறது.குறிப்பாக மீனவ சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர்.விவசாயிகளுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.

கோட்டபாய ராஜபக்ஸவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இந்த மாவட்டமும் பாதிக்கப்பட்டது.

இந்த மாவட்டத்தில் இருக்கின்ற பாதிப்புக்களில் இருந்து இம் மாவட்டத்தை மீட்டெடுப்பதற்காகவும்,இந்தியாவிற்கு அருகில் இந்த மாவட்டம் இருக்கின்றமையினால் இந்தியாவிற்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைத்தல்,கப்பல் சேவையை ஆரம்பித்தல்,சுற்றுலாத்துறையை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து நாங்கள் சஜித் பிரேம தாசாவுடன் பேசி உள்ளோம்.

எதிர்வரும் 3 ஆம் திகதி அவர் மன்னார் வருகின்ற போது மக்களுக்கு குறித்த விடையங்கள் குறித்து தெளிவாக தெரியபடுத்துவார்.

அவரின் வெற்றிக்கு பின்னர் என்ன சொல்கிறாரோ அதை செய்ய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அவருடன் இணைந்து செயல்படும்.

எமது கட்சி மாத்திரம் இல்லாது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மனோ கணேசன் எம்.பி,திகாம்பரம் எம்.பி போன்றவர்களின் கட்சிகள் உற்பட எத்தனையோ கட்சிகள் சஜித் பிரேமதாசவின் பின்னால் அவரின் வெற்றிக்காக பாடுபடுகின்றனர்.

நாடு முழுவதும் அவருடைய வெற்றிக்காக மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.அனைத்து இன மக்களின் வாக்குகளுடனும் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார். விவசாயிகள்,மன்னார் மீனவர்களின் பிரச்சினை,வன வள திணைக்களத்தின் கீழ் அபகரிக்கப் பட்டுள்ள காணிகள் உள்ளிட்ட 10 விடையங்கள் உள்வாங்கப்பட்டுள்ள.

எனவே அவர் மீது எங்களுக்கு பூரண நம்பிக்கை உள்ளது. அவர் பல விடையங்களை கேட்டுச் செய்யக் கூடியவர். எனவே அவரை வெற்றி பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலை அரிய நோந்திரனுக்கு ஏற்பட்டுள்ளது. அவரை கொண்டு வந்து தமிழ் பொது வேட்பாளராக களமிறக்கி உள்ளனர்.

ஆனால் அவர்களுக்குள் ஒருவர் ரணிலுடன் பேசுகின்றார். மேலும் ஒருவர் சஜித்துடன் பேசுகின்றனர்.இதன் அர்த்தம் என்ன என்று தெரியவில்லை.

எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது.மிகவும் நொந்து போன ஒரு சமூகமே எம் தமிழ் சமூகம். இன்று உரிமைகளை பற்றி பேசுகின்றவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.ஆனால் இன்று மீனவர்களும்,யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மக்கள் பலர் யுத்தத்தினால் அவயங்களை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். எனவே மக்களாகிய நீங்கள் இந்த நாட்டிற்கு தகுதியான ஜனாதிபதி யார் என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

அவரினால் எமது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்பதை உணர்ந்து சஜித் பிரேமதாசவைஅமோக வாக்குகளால் வெற்றி பெறச் செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் குறூப் நிருபர் – எஸ்.ஆர்.லெம்பேட்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x