164
வியட்நாம் சோசலிச குடியரசின் 79 ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று முன்தினம் (29) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் வியட்நாம் தூதுவர் Trinh Thi Tam தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கை வியட்நாம் ஒற்றுமை சங்கத்தின் செயலாளர் நாயகம் சுதசிங்க சுகதபால, கொழும்பு பொது நூலகத்தின் பிரதம நூலகர் வருணி ககபதாராச்சி, இராஜதந்திரிகள் உட்பட மத தலைவர்கள், வியட்நாம் சமூகம் மற்றும் தூதரக அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
ருஸைக் பாரூக்