160
கிழக்கு மாகாணமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்டப் போட்டியில் மருதமுனை அல்–மதீனா வித்தியாலயம் சம்பியன் பட்டத்தை வென்றது.
கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த புதன்கிழமை (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அல்–அமீன் வித்தியாலயத்தை எதிர்கொண்ட அல்–மதீனா அணி 4–2 என்ற கோல் வித்தியாசத்தில் பெனால்டி சூட் அவுட் முறையில் வெற்றியீட்டியது.
போட்டியின் முழுநேர முடிவின்போது இரு அணிகளும் தலா ஒரு கோல் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் அல்–மதீனா வித்தியாலயம் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவானது.
பெரியநீலாவணை விசேட நிருபர்