Monday, October 7, 2024
Home » இன்று முதல் செப். 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம்

இன்று முதல் செப். 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம்

- நெடுந்தீவு, பூநகரி, தட்டுவான்கோட்டை, சுண்டிக்குளம் பகுதிகளில் தாக்கம்

by Rizwan Segu Mohideen
August 28, 2024 7:42 am 0 comment

– நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவிலான மழை
– வட பகுதி உள்ளிட்ட சில இடங்களில் பலத்த காற்று

சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, இன்று (28) முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதற்கமைய, இன்று (28) பி.ப. 12:11 மணியளில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவான்கோட்டை, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றையதினம் (28) நாட்டின் வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமெனவும், அதேவேளை மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்,

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளையில் ஏற்படக் கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x