Home » TVS Raider இலங்கையில் அறிமுகம்: நகர்ப்புற பயணிகளுக்கான கேம் சேஞ்சர்

TVS Raider இலங்கையில் அறிமுகம்: நகர்ப்புற பயணிகளுக்கான கேம் சேஞ்சர்

- சிறந்த-இன்-கிளாஸ் ஆக்சிலரேஷன், ரிவர்ஸ் எல்சிடி கிளஸ்டர், அனிமலிஸ்டிக் LED விளக்குகள்

by mahesh
August 28, 2024 11:16 am 0 comment

TVS மோட்டார் நிறுவனம் (TVSM) – இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் இயங்கும் ஒரு முன்னணி உலகளாவிய வாகன உற்பத்தியாளர், அதன் புதிய அம்சங்கள் நிறைந்த நிறைந்த TVS Raider 125 ஐ இன்று இலங்கையில் அறிமுகப்படுத்தியது. ஸ்போர்ட்டி மோட்டார்சைக்கிள் எல்சிடி டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், 3V ஐடச் ஸ்டார்ட், அனிமலிஸ்டிக் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் முதல்- ஆசனத்துக்குக் கீழான சேமிப்பு போன்ற அம்சங்களுடன் வருகிறது.

TVS ரைடரில் சக்திவாய்ந்த 125CC எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது ஒரு சுகமான சாகசம் நிறைந்த சரியான சக்தி மற்றும் செயல்திறனை வழங்குகிறது, அதன் நுணுக்கமான, ஆக்ரோஷமான ஓட்டத்துக்கான வடிவமைப்பு மூலம் அது வீதியில்போகும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கின்றது. எரிபொருள் திறன், வேகம் மற்றும் ஹெல்மெட் அறிவுறுத்தல் உள்ளிட்ட நிகழ்நேர தகவல்களை வழங்கும் மேம்பட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டை இது கொண்டுள்ளது, இது சாரதிகளுக்கு எப்போதும் தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்கிறது. ஆறுதல் மற்றும் சிறந்த கையாளுதலுக்காக வடிவமைக்கப்பட்ட டிவிஎஸ் ரைடர் குறுகிய நகர பயணம் மற்றும் நீண்ட பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது. அதேநேரத்தில் டிஸ்க் பிரேக்குகள் உட்பட அதன் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஒவ்வொரு பயணத்துக்கும் அதிகபட்ச கட்டுப்பாட்டையும் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.

டிவிஎஸ் மோட்டார் நிறுவன இன்டர்நேஷனல் பிஸ்னஸ் துணைத் தலைவர் திரு. ராகுல் நாயக் கூறுகையில், “டிவிஎஸ் ரைடர் அறிமுகம் மூலம் இரு சக்கர வாகன சந்தையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறோம். சிறந்த அம்சங்கள், அதிநவீன தொழில்நுட்பம், நுணுக்கமான மற்றும் தனித்துவமான வடிவமைப்பு, ஒப்பிடமுடியாத பயணத் தரம், இது தற்போதைய தலைமுறையின் தேர்வாக இருக்க வேண்டும்.”

TVS Mobility (Pvt) Ltd,இன் குளோபல் தலைவர் திரு. GS ராகவன், “TVS மோட்டார் கம்பனியின் நம்பிக்கை, நம்பகத்தன்மை, தரம் மற்றும் செயல்திறன் ஆகியவை இலங்கையில் நாங்கள் வழங்கும் அனைத்து தயாரிப்புகளிலும் வெளிப்பட்டுள்ளது. அந்த சிறப்பான வரிசையில் டிவிஎஸ் ரைடர் இணைகிறது. இது எல்லா வழிகளிலும் Gen Z வாகனம் ஆகும். இது அவர்களின் நடைமுறைத் தேர்வாக வெளிப்பட வேண்டும்”.

TVS Lanka (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதல் அந்தோனி, TVS RAIDER 125 இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து உற்சாகம் தெரிவித்தார், மேலும் இது TVS Lanka உற்பத்தி வரிசையில் சேர்க்கப்படும் மிகவும் அற்புதமான தயாரிப்பாக இருக்கும். இலங்கையில் ஒரு வாகன அசெம்பிளர் என்ற வகையில் TVS லங்கா, இலங்கையர்களுக்கு ஈடு இணையற்ற பயண அனுபவத்தை வழங்கும் மேம்பட்ட தொழில்நுட்பம், சிறந்த அம்சங்கள், தனித்துவமான வடிவமைப்பில் பெருமைப்படுத்தும் TVS RAIDER 125 என்ற மோட்டார் சைக்கிளை அசெம்பிள் செய்யும் பாக்கியத்தைப் பெற்றுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

உலக தரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களை வழங்குவதில் எங்கள் உள்ளூர் உதிரிபாக உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதன் மூலம் TVS RAIDER ஐ அறிமுகப்படுத்துவதில் TVS Lanka உள்ளூர் மதிப்பைக் கூட்டியதாக திரு. அந்தோனி மேலும் கூறினார். இலங்கையில் உள்ளூர்மயமாக்கலை ஊக்குவிப்பதில் கைத்தொழில் அமைச்சு உட்பட அனைத்து அரச நிறுவனங்களையும் அவர் பாராட்டினார். TVS RAIDER இரு சக்கர வாகனப் பிரிவில் அதிக இளைஞர்களை ஈர்க்கும் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

வடிமைப்பு:
டிவிஎஸ் ரைடர் ஒரு தனித்துவமான வடிவமைப்பு கருப்பொருளுடன் நிறுவனத்தின் புதுமைக்கான வடிவமைப்பு ஆர்வத்தை உள்ளடக்கியது. மோட்டார் சைக்கிளின் தனித்துவமான அடையாளமாக அதன் இலச்சினை உள்ளது. வலுவான எண்ணெய்த்தாங்கி மற்றும் அதன் திடமான அமைப்பு அதற்கு கவர்ச்சியை அளிக்கிறது. அதேநேரத்தில், இது ஒரு விளையாட்டுக்கான கச்சிதமான மோட்டார் சைக்கிள் ஆகும். TVS ரைடரின் வடிவமைப்புக் கூறுகள் அதன் தனித்துவமான தலைமை விளக்கு மற்றும் பிற்புற விளக்கு ஆகியவை சிறந்த தெரிவுநிலையை வழங்குகிறது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இதன் தன்மை மற்றும் பூச்சுகள் இளமை வண்ணங்கள் என்பன அதன் ஆற்றல்மிக்க வடிவமைப்பிலிருந்து பிரிக்க முடியாதவை.

செயல்திறன்:
டிவிஎஸ் ரைடர் மேம்பட்ட 124.8சிசி காற்று மற்றும் எண்ணெய்_ குளிரூட்டப்பட்ட 3 V என்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது அதிகபட்சமாக 11.2BHP @ 8,000 ஆர்பிஎம் மற்றும் 11.2NM @ 6,500 ஆர்பிஎம்மில் முறுக்கு விசை​யை வெளிப்படுத்தும். இந்த மோட்டார் சைக்கிள் 5.9 செக்கன்களில் மணிக்கு 0-60 கிமீ வேகத்தில் சிறந்த-இன்-கிளாஸ் ஆர்முடுகலை வழங்குகிறது. வாயு- சார்ஜ் செய்யப்பட்ட 5-படிமுறைகொண்ட மாற்றிமைக்கக்கூடிய மோனோ-ஷாக் சஸ்பென்ஷன், குறைந்த உராய்வு முன் சஸ்பென்ஷன் மற்றும் பிளவு இருக்கை, 5_வேகங்கொண்ட கியர்பாக்ஸ் மற்றும் 17″ அலோய் சங்கி அகன்ற டயர்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். ரிவர்ஸ் எல்சிடி டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரில் மேம்பட்ட ஹைடெக் கருவி ஏற்றப்பட்டுள்ளது, இது எளிதாக வாசிக்கக்கூடிய விபரங்களைக் காட்டுகிறது. சுவிட்ச் கிளஸ்டர், ஃபுட்பெக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் விபரங்கள் ஆகியவை சமரசமற்ற செயல்பாட்டு நன்மைகளுக்காக மோட்டார் சைக்கிளுடன் இணக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சொகுசு, பாதுகாப்பு மற்றும் வசதி:
டி.வி.எஸ் ரைடர் பயணம் செய்பவரின் சௌகரியத்தின் மீது உச்சக்கட்ட கவனம் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் செயல்திறன் மோட்டார்சைக்கிளின் டிஎன்ஏ அடிப்படையில், நீண்ட வீல்பேஸ், சௌகரியமான மோட்டார் சைக்கிளோட்டம் மற்றும் மோனோ-ஷாக் ஆகியவற்றில் சமநிலைப்படுத்தப்பட்ட குறைந்த இருக்கை உயரத்தின் உள்மைவைக் கையாளுதலை குறிக்கின்றது அத்தியாவசியப் பொருட்கள், ஹெல்மெட், மற்றும் USB சார்ஜர் ஆகியவற்றுக்கான எளிதாக அணுகக்கூடிய இருக்கையின் கீழான சேமிப்பு வசதி போன்ற அம்சங்கள் நிறைவான பயண அனுபவத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன.

TVS Raider ஆனது சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களின் சிறந்த வண்ணத் தேர்வுடன் வருகிறது

TVS MotorCompany பற்றி
TVS மோட்டார் நிறுவனம் (BSE:532343 மற்றும் NSE: TVSMOTOR) உலகளவில் புகழ்பெற்ற இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர் ஆகும், இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் அமைந்துள்ள நான்கு அதிநவீன உற்பத்தி வசதிகளுடன் நிலையான செயற்பாடுகள் மூலம் முன்னேற்றம் அடைகறோம். 100 ஆண்டுகால நம்பிக்கை, மதிப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் பேரார்வம் ஆகியவற்றில் வேரூன்றி, புதுமையான மற்றும் நிலையான செயல்முறைகள் மூலம் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தயாரிப்புகளை மிக உயர்ந்த தரத்தில் தயாரிப்பதில் பெருமை கொள்கறோம். மதிப்புமிக்க டெமிங் பரிசை வென்ற ஒரே இரு சக்கர வாகன நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் மட்டுமே. J.D. Power IQS மற்றும் APEAL ஆய்வுகளில் எங்கள் தயாரிப்புகள் அந்தந்த வகைகளில் முன்னணியில் உள்ளன. J.D. பவர் வாடிக்கையாளர் சேவை திருப்திக் கணக்கெடுப்பில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதல்தர நிறுவனமாகத் தரவரிசை பெற்றுள்ளோம். ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட எங்கள் குழு நிறுவனமான நார்டன் மோட்டார் சைக்கிள்கள், உலகின் மிகவும் உணர்ச்சிகரமான மோட்டார் சைக்கிள் வரத்தக நாமங்களில் ஒன்றாகும். தனிப்பட்ட இ-மொபிலிட்டி ஸ்பேஸில் உள்ள எங்கள் துணை நிறுவனங்களான சுவிஸ் இ-மொபிலிட்டி குரூப் (எஸ்இஎம்ஜி) மற்றும் ஈஜிஓ மூவ்மென்ட் ஆகியவை சுவிட்சர்லாந்தில் உள்ள இ-பைக் சந்தையில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளன. TVS மோட்டார் நிறுவனம் நாங்கள் செயல்படும் 80 நாடுகளில் மிகச் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க முயற்சிக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு www.tvsmotor.com

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x