534
தலதா அத்துகோரள பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக, வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியைச் சேர்ந்த கருணாரத்ன பரணவிதானகேவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த இடத்தில் உள்ள அவர் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ம.ச. இரத்தினபுரி மாவட்ட (நிவித்திகல தேர்தல் தொகுதி) பாராளுமன்ற உறுப்பினரான தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்வதாக அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2399-34_T