220
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 19ஆம் திருவிழாவான சூர்யோற்சவம் இன்று (27) காலை நடைபெற்றது.
காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார்.
சூரிய திருவிழாவான இன்றைய தினம் நூறுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சூரிய பகவானின் அருள் காட்சியினை கண்டு களித்தனர்.
நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01) காலை இடம்பெறவுள்ளது.
யாழ் . விசேட நிருபர்