Tuesday, October 8, 2024
Home » கல்விக்கு ஆதரவாக இராணுவத் தளபதி கிளிநொச்சியில் சிமிக் பூங்கா திறப்பு

கல்விக்கு ஆதரவாக இராணுவத் தளபதி கிளிநொச்சியில் சிமிக் பூங்கா திறப்பு

by Rizwan Segu Mohideen
August 26, 2024 5:04 pm 0 comment

55ஆவது காலாட் படைப்பிரிவின் முயற்சியான “கிளிநொச்சி சிமிக் பூங்கா”, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

நேற்றையதினம் (25) திறக்கப்பட்ட இந்த பூங்கா திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி சமூகத்தின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், உள்ளூர் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்கும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பூங்கா இலவச வைபை, கற்றல் பகுதிகள், கழிவறைகள், சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் மின்சார வசதிகள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளதுடன் இவை அனைத்தும் சமூகத்திற்கான கற்றல் சூழலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x