Monday, November 4, 2024
Home » திபெத் உரிமைகளையும் நீதியையும் பாதுகாக்க சுவிட்சர்லாந்தில் ஒற்றுமை பிரசாரம்

திபெத் உரிமைகளையும் நீதியையும் பாதுகாக்க சுவிட்சர்லாந்தில் ஒற்றுமை பிரசாரம்

by Rizwan Segu Mohideen
August 24, 2024 3:49 pm 0 comment

திபெத் மக்களுடன் தொடர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் நாடுகடத்தப்பட்ட திபெத்திய குடும்பங்களின் குழு சீன ஆட்சியின் கீழ் வாழும் திபெத் நாட்டவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்காக அயராது குரல் கொடுத்து வருகிறது.

மனித உரிமைகள் தினமான 2012 டிசம்பர் 10 ஆம் திகதி தொடங்கிய அவர்களின் பிரச்சாரம், ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு முன்பாக மாதாந்திர போராட்டங்களுடன் தொடர்கிறது.

திபெத் ஒற்றுமை இயக்கத்தின் பிரச்சாரம், சீன ஆதிக்கத்தின் கீழ் தங்கள் உயிர்களை இழந்த 1.2 மில்லியன் திபெத்தியர்களின் நினைவை மதிக்கிறது . இன்னும் திபெத்தில் வாழ்பவர்களின் தொடர்ச்சியான துன்பங்களை எடுத்துக்காட்டுகிறது.சீன அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அரசியல் அடக்குமுறை, கலாச்சார ஒருங்கிணைப்பு, சமூக பாகுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றிற்கு எதிராக வன்முறையற்ற போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அபிவிருத்தி மற்றும் நல்லெண்ணம் என்ற போர்வையில் திபெத்திய மக்களின் அடிப்படை உரிமைகள் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளன.

“நான்கு முதல் பதினெட்டு வயதுடைய சுமார் ஒரு மில்லியன் திபெத்திய குழந்தைகள், காலனித்துவப் பாடசாலைகளில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு, அவர்களது குடும்பங்கள், மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்திலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்துகின்றனர். அதே சமயம், திபெத்திய மொழிப் பாடசாலைகள் மூடப்பட்டு, திபெத்தியரின் தேசிய அடையாளத்தை மேலும் சிதைக்கிறது” என திபெத் ஒற்றுமை இயக்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் சுதந்திரம் மற்றும் அமைதியை மீட்டெடுக்க 1959, 1961 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திபெத் மீதான ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை செயல்படுத்த அவர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

தலாய் லாமா திபெத்துக்குத் திரும்புவதற்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச அமைப்புகளையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.காடழிப்பு, மேய்ச்சல், கட்டுப்பாடற்ற சுரங்கம், அணுக்கழிவுகளை கொட்டுதல் உள்ளிட்ட திபெத்தில் நடைபெறும் பாரிய சுற்றுச்சூழல் அழிவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் ஆர்வலர்கள் கோருகின்றனர்.

“மூன்றாம் துருவம்” மற்றும் “ஆசியாவின் நீர் கோபுரம்” என்று அடிக்கடி குறிப்பிடப்படும் திபெத்தின் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.அவர்களின் கோரிக்கைகளில் அரசியல் கைதிகளை விடுவித்தல், மத மற்றும் கலாச்சார சுதந்திரங்களை நசுக்குவது பற்றிய விசாரணை, காலனித்துவ பாடசாலைகளை மூடுதல் மற்றும் ஐ.நா. உண்மையைக் கண்டறியும் பணியை நிறுவுதல் ஆகியவையும் அடங்கும்.

கூடுதலாக, திபெத் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்கவும், சர்வதேச கடமைகளுக்கு ஏற்ப திபெத்தியர்கள், தெற்கு மங்கோலியர்கள் மற்றும் உய்கர்கள் உட்பட அதன் அனைத்து குடிமக்களின் உரிமைகளை மதிக்கவும் புனித தலாய் லாமாவின் பிரதிநிதிகளுடன் கணிசமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட சீன அரசாங்கத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள நாடுகடத்தப்பட்ட திபெத்திய சமூகம் இந்த நோக்கத்தில் தங்கள் உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளது.சர்வாதிகார ஆட்சிகளின் வன்முறை மற்றும் பொய்களுக்கு உலகம் இனி கண்மூடித்தனமாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்துகிறது.

திபெத்தின் குழந்தைகளைப் பாதுகாக்கவும், திபெத்திய மக்களின் தனித்துவம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் சர்வதேச சமூகம் தீர்க்கமாக செயல்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

“தாமதமாகும் முன் திபெத்தைக் காப்பாற்றுங்கள்” என்ற அவர்களின் செய்தி எதிரொலிக்கிறது. அவர்கள் அமைதியான ஆனால் உறுதியான நீதி மற்றும் சுதந்திரத்திற்கான பிரச்சாரத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x