நீர் கட்டணத்தை குறைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த புதிய நீர் கட்டண திருத்தம் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த புதிய நீர் கட்டணத் திருத்தத்தின் கீழ், சமூர்த்தி பயனர்கள் மற்றும் தோட்ட குடியிருப்புகள் தவிர்ந்த வீட்டுப் பிரிவு, அரசுப் பாடசாலைகள், அரசு உதவி பெறும் பாடசாலைகள் பிரிவு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் பிரிவு,
விலை சூத்திரத்தின் அடிப்படையில், வீட்டு நீர் நுகர்வோரின் குடிநீர் கட்டணத்தை 7 சதவீதத்தாலும், அரசு மருத்துவமனைகளில் 4.5 சதவீதத்தாலும், விகாரைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு 6.3 சதவீதத்தாலும் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, மொத்த நீர் கட்டணத்தை 5.94 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வீட்டு பிரிவில் 0 முதல் 05 அலகுகளுக்கான கட்டணம் 60 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக ஆக 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
76 முதல் 100 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகுக்கு அறவிடப்படும் கட்டணம் 270 ரூபாயில் இருந்து 250 ரூபாவாக 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது..
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் பிரிவின் கீழ் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் 60 ரூபாவாக இருந்த கட்டணம் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய கட்டணம் 55 ரூபாவாகும்,.
இதேவேளை, அரச வைத்தியசாலைகளுக்கு 100 ரூபாவாக இருந்த ஒரு அலகு நீர் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய கட்டணம் 95 ரூபாவாகும்.
எனினும், இந்த குடிநீர் கட்டண திருத்தத்தின் கீழ் மாதாந்திர சேவைக் கட்டணத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.
water