282
புராதன சடங்குகளை மதித்து வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நான்கு விகாரைகளின் வருடாந்த எசல மகா பெரஹரா மிகச் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கும் தூதுப் பத்திரத்தை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, நேற்று (20) பிற்பகல் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.