Saturday, December 14, 2024
Home » ஒரு வாக்காளருக்கு வேட்பாளர் உச்சபட்சம் ரூ. 109 செலவிட முடியும்

ஒரு வாக்காளருக்கு வேட்பாளர் உச்சபட்சம் ரூ. 109 செலவிட முடியும்

- மொத்த செலவீன எல்லை சுமார் ரூ. 113 கோடி

by Prashahini
August 20, 2024 10:12 am 0 comment

– தேர்தல் ஆணைக்குழுவினால் செலவீன எல்லை அடங்கிய அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளர் சார்பாக செலவிடக்கூடிய வேண்டிய செலவின் வரம்பு விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள், ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த செலவின வரம்புகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட ஒரு வாக்காளரின் சார்பாக ஒரு வேட்பாளர் 109 ரூபாய்க்கு மிகாமல் செலவு செய்ய முடியும் என்றும், அதிகபட்சமாக நூற்று எண்பத்தாறு கோடியே எண்பத்து இரண்டு இலட்சத்து 98,586 ரூபாய் செலவழிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அந்த தொகையில் 60 சதவீதத்தை அல்லது நூற்று பன்னிரெண்டு கோடியே ஒன்பது இலட்சத்து 79,151 மற்றும் 60 சதங்களை தனது பிரச்சார செலவாக ஏற்க முடியும்.

இது தவிர, மீதமுள்ள 40 சதவீதம் அதாவது எழுபத்து நான்கு கோடியே எழுபத்து மூன்று இலட்சத்து 19,434 மற்றும் 40 சதங்களை வேட்பாளரின் பிரச்சாரப் பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது வேறு அரசியல் கட்சியின் செயலாளருக்கோ அல்லது வாக்காளர்களுக்கோ செலவிடலாம் என தேர்தல் ஆணைக்குழு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் தேர்தல் பிரசார செலவுகள் உள்ளிட்ட செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் பிரசாரச் செலவுகளுக்குப் பணம் எப்படிப் பெறப்பட்டது, எப்படிச் செலவிடப்பட்டது என்பது குறித்த விரிவான தகவல்கள் குறித்த அறிக்கையில் அடங்கியிருக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பிட்ட திகதிக்கு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்காமை அல்லது அறிக்கைகளில் பிழைகள் இருப்பது சட்டவிரோதமான செயல் எனவும், இது தொடர்பில் தேர்தல் வாக்களிப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட்டிருக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது வர்த்தமானி அறிவித்தலில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

2397-66_T

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT