2024 ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இன்று (16) கண்டி மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பெளத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மத தலங்களுக்கு விஜயம் செய்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.
இன்று (16) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். தலதா மாளிகைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவரை தியவடன நிலமே உள்ளிட்ட விகாரை பஸ்நாயக்க நிலமேமார்கள் வரவேற்றனர்.
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இஅஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரரை சந்தித்து நலன் விசாரித்து, தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து, நலன் விசாரித்து தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆசி பெறும் நோக்கில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மகா நாயக்க தேரர்கள் தலைமையில் இடம்பெற்ற பிரித் பாராயணம்.
கண்டி மீரா மாக்கம் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அவர், அங்கு இடம்பெற்ற துஆப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டார்.
கண்டி மாநகரம், கட்டுக்கலை, அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்று தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.
கண்டி ஆயர் ஹெரோல்ட் அந்தோனி பெரேராவை சந்தித்து சமய ஆராதனை வழிபாடுகளில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆசி பெற்றுக் கொண்டார்.