அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசாரப் போட்டிகளை முன்னிட்டு, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்திய, மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசாரப் போட்டிகளில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு 11 முதலிடங்கள் கிடைத்துள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம். றஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.
முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட போட்டி நிகழ்வுகள், அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசாரப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.
இதுகுறித்த விபரங்களை கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ். குலேந்திரகுமார் பத்தரமுல்ல கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் மொத்தம் 11 முதலிடங்களை பெற்றுக் கொள்வதற்கு அவர்களைத் தயார்படுத்தி, வழிப்படுத்திய அதிபர், ஆசிரியர்கள், பெற்றார்கள், ஆசிரியர் ஆலோசகர் (இஸ்லாம்) மௌலவி என்.ரி.நஸீர், உதவிக் கல்விப் பணிப்பாளர் (இஸ்லாம்) மௌலவி ஏ.ஆர்.ஏ.மனாப், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) எம்.எம்.சித்தி பாத்திமா ஆகியோருக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் நன்றி, பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
வெற்றி மாணவர்களின் பெயர் மற்றும் பாடசாலை விபரம் வருமாறு, பாட்டு – ஐ.சப்றா இஸ்ஸத், தரம்-10, பாயிஸா மகா வித்தியாலயம், அ.பற்று, பாட்டு – எஸ்.நிஸ்மா, தரம்-13, ஆயிஸா முஸ்லிம் பெண்கள் கல், அ.பற்று, அதான் -ஏ.எல்.எம்.ஹம்தான், தரம்-13, மின்ஹாஜ் மகா வித்தி, பாலமுனை. அஸ்மாஉல் ஹூஸ்னா – எம்.எப்.இஹ்திசாமா, தரம்-13, அஸ்-ஸிராஜ் ம.வி, அ.பற்று. அறபு எழுத்தணி – ஆர்.சிப்னா, தரம்-13, அக்கரைப்பற்று மு. மத்திய கல்லூரி. அறபு-தமிழ் இலக்கியம் – ஏ.பாத்திமா திப்றான், தரம்-11, பாயிஸா மகா வித்தி, அ.பற்று.
அறபு-தமிழ் இலக்கியம் – பி.எல்.எப்.வசீக்கா, தரம்-13, அ.பற்று மு. ம. கல்லூரி.
கஸீதா – தரம்-07, 08 மாணவர் குழு, பாயிஸா மகா வித்தியாலயம், அ.பற்று.
கஸீதா – தரம்-10, 11 மாணவர் குழு, அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம், அ.பற்று.
கஸீதா – தரம்-13 மாணவர் குழு, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி.
றபான் நடனம் – தரம்-12, 13 மாணவர் குழு, அக்கரைப்பற்று மு.ம. கல்லூரி.
(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)