சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவின் பெயரை தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) பிரேம்நாத் சி. தொலவத்த முன்மொழிந்ததுடன் அதனை பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன வழிமொழிந்தார்.
இந்தக் குழுவின் தலைவராக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நாமல் ராஜபக்ஷ அந்தக் குழுவின் உறுப்பினர் மற்றும் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததை அடுத்து தலைவர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு 2024.08.08 ஆம் திகதி இந்தத் தெரிவு மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான யதாமினி குணவர்தன மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக ஏற்பட்ட குழுவின் வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அக்குழுவில் பணியாற்றுவதற்காக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.