இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் தமது தீர்மானத்தை வெளியிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அவர் ஏற்கனவே தமது இணக்கத்தை தெரிவித்திருந்தார்.இந்நிலையிலே, மீண்டும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் இணைந்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று அவர் கருத்துத் தெரிவித்த அவர், பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை நியமித்துள்ளது. இதனாலேயே, மீண்டும் கட்சியுடன் இணைந்து கொள்ள தாம் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)