இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இலங்கை அணி நேற்று (11) இங்கிலாந்தை நோக்கி பயணித்தது.
எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த டெஸ்ட் தொடருக்காக ஏற்கனவே அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, திமுத் கருணாரத்ன மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் உட்பட எட்டு வீரர்கள் இங்கிலாந்து சென்றிருக்கும் நிலையிலேயே டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றிருக்கும் எஞ்சிய வீரர் நேற்று பயணத்தை மேற்கொண்டனர்.
முன்னதாக இலங்கை அணி எதிர்வரும் ஓகஸ்ட் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் நான்கு நாள் பயிற்சிப் போட்டி ஒன்றில் ஆடவுள்ளது. தொடர்ந்து மான்செஸ்டரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியை அடுத்து ஓகஸ்ட் 29 ஆம் திகதி லோட்ஸில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளதோடு இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டெம்பர் 6 ஆம் திகதி ஓவலில் ஆரம்பமாகவுள்ளது.