திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் ஸ்ரீ கார்யம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் அருளாணையின் வண்ணம் பிரணவம் அறக்கட்டளையின் அனுசரணையில் திருஞானசம்பந்தர் சைவப்பணி மன்ற அறநெறிப் பாடசாலைகளுக்கு சுவாமிகள் விஜயம் செய்து அருளாசி வழங்கவுள்ளார்.
அத்துடன் தமிழ்நாடு திருஞானசம்பந்தர் திருமடத்தைச் சேர்ந்த திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீ கார்யம் வாமதேவ தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவுகளையும் ஆற்றவுள்ளார்.
இந்த அருளாசி வழங்கும் நிகழ்வுகள் எதிர்வரும் 2024.08.24ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் நடைபெறவுள்ளது. அன்று காலை 10.30 மணிக்கு என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் என்பீல்ட் அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகளுக்கும் அன்று பிற்பகல் 1.00 மணிக்கு போடைஸ் தமிழ் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் போடைஸ் அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகளுக்கும் அன்று பிற்பகல் 3 மணிக்கு நோர்வுட் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகளுக்கும் அருளாசி வழங்கவுள்ளார். பிரணவம் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவினரும் திருஞானசம்பந்தர் சைவப்பணி மன்ற அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களும் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த அருளாசி வழங்கும் நிகழ்வுக்கு தினகரன், தினகரன் வாரமஞ்சரி ஊடக அனுசரணை வழங்குகிறது.