222
பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்துக்கும் எகிப்தின் வௌிவிவகார இராஜதந்திர நிறுவனத்துக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எகிப்துக்கு உத்தியோகபூர்வ விஜயம்மேற்கொண்ட வெளிநாட்டமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பத்ர் அப்தெலட்டியும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர பயிற்சி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தலை நோக்காகக் கொண்டு இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.