அகில இலங்கை தமிழ் மொழித்தின மாவட்ட மட்ட எழுத்தாக்கப் போட்டிகளின் 15 போட்டிகளில் முதல் மூன்று 14 இடங்கள் கல்முனை கல்வி வலயத்திற்குக் கிடைத்துள்ளன.
பிரிவு-1 எழுத்தாக்கம்_ -மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை (ம.ஹஸ்னத் ஹனா), பிரிவு-2 கட்டுரை வரைதல்_- மஸ்ஹர் உயர்தரப் பாடசாலை (மு.ம.மதீஹா), பிரிவு-5 இலக்கணப் போட்டி_-உவெஸ்லி உயர்தரப் பாடசாலை (மோனிஷா), பிரிவு-4 சிறுகதை-_ அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை (பொ.கா.மு.மிஹாத்), தமிழறிவு வினாவிடை_-அல்- அஷ்ரக் தேசிய பாடசாலை ஆகியோர் மாவட்டத்தில் முதலிடங்களைப் பெற்று மாகாண போட்டிக்குத் தெரிவாகினர். இவர்களில் எழுத்தாக்கம்; பிரிவு 1, அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி, ம.ஹஸ்னத் ஹனா,
சிறுகதை: பிரிவு 4, அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன் பொ.கா.மு. மிஹாத் ஆகியோர் மாகாணத்தில் முதலிடங்களைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.
எழுத்தாக்கத்தில் மாவட்டத்தில் ஐந்து முதலிடங்களுடன் ஆறு இரண்டாம் இடங்களும் மூன்று மூன்றாம் இடங்களுமாக 14 இடங்கள் கிடைத்துள்ளன.
மாகாணத்தில் கிடைத்த இரு முதலிடங்களுடன் இரண்டு இரண்டாம் இடங்களும் ஒரு மூன்றாம் இடமுமாக ஐந்து இடங்கள் கிடைத்துள்ளன.
மாகாணத்தில் கட்டுரை வரைதல் பிரிவு_2 மஸ்ஹர் உயர்தரப் பாடசாலை மாணவி ப, மதீஹா, இலக்கணப் போட்டி பிரிவு-_5 உவெஸ்லி எஸ்.மோனிஷா ஆகியோர் இரண்டாம் இடங்களையும் தமிழறிவு வினா விடைப் போட்டியில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளனர்.
எழுத்தாக்கப் போட்டிகள் தவிர்ந்த ஏனைய மாவட்ட மட்டப் போட்டிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழன் திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் இடம்பெறவுள்ளது. மாவட்ட போட்டிகளைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கான தமிழ் மொழித் தினப் போட்டிகள் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெறவுள்ளன. மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டினை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ.சஹுதுல் நஜீம் தலைமையிலான அணியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
போட்டி நிகழ்வுகள் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, பற்றிமா தேசிய பாடசாலை, ஆர்.கே.எம்.மகா வித்தியாலயம், இஸ்லாமாபாத் ஆகிய பாடசாலைகளில் இடம்பெறவுள்ளன.
--ஜெஸ்மி எம்.மூஸா (பெரியநீலாவணை தினகரன் நிருபர்)