Home » 2024 தேசிய வணிக விசேடத்துவ விருது நிகழ்வில் ஜொலித்த HNB பொதுக் காப்புறுதி

2024 தேசிய வணிக விசேடத்துவ விருது நிகழ்வில் ஜொலித்த HNB பொதுக் காப்புறுதி

by Rizwan Segu Mohideen
August 12, 2024 3:24 pm 0 comment

மதிப்புமிக்க தேசிய வணிக விசேடத்துவ விருதுகள் (NBEA) 2024 இல் பொதுக் காப்புறுதி (General Insurance) பிரிவில் HNB பொதுக் காப்புறுதி (HNBGI) நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் NBEA விருது நிகழ்வானது, பெருநிறுவனங்களின் ஆளுகை, அவற்றின் செயற்றிறன் முகாமைத்துவம், சந்தை அணுகல், பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR), நிதி பெறுபேறுகள் உள்ளிட்ட விடயங்களில் ஒப்பிட முடியாத சாதனைகளை வெளிப்படுத்தும் நிறுவனங்களைக் கௌரவித்து கொண்டாடுகிறது.

HNB பொதுக் காப்புறுதி, பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) சித்துமின ஜயசுந்தர இது தொடர்பில் தெரிவிக்கையில், “NBEA விருது நிகழ்வில் எமக்குக் கிடைத்த அங்கீகாரமானது, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட எமது அர்ப்பணிப்பை எடுத்துக் கூறுகின்றது. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், சிறந்த காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதற்கான தொடர்ச்சியான முன்னேற்றத்தின் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் நாம் உறுதி பூண்டுள்ளோம். எமது சமீபத்திய முதலீடுகள், நிர்வாகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும், தொழில்துறையின் முன்னணியில் எமது நிலையைத் தக்கவைப்பதிலும் நாம் கொண்டுள்ள கவனத்தை எடுத்துக் காட்டுகின்றது.” என்றார்.

தனது 19ஆவது ஆண்டைக் கொண்டாடும் NBEA வழங்கியுள்ள இந்த அங்கீகாரமானது, HNBGI இன் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் சமூகப் பொருளாதார துறையில் அதன் முக்கிய பங்களிப்புகளை எடுத்துக் கூறுகின்றது. புத்தாக்கம், வாடிக்கையாளரை மையப்படுத்திய செயற்பாடுகள், செயற்பாட்டில் விசேடத்துவம் ஆகியவற்றினால் இயங்கும் காப்புறுதித் துறையில் HNBGI நிறுவனத்தின் முன்னணி நிலையை இந்த கௌரவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

சமீபத்திய வருடங்களில் HNBGI நிறுவனம், புத்தாக்கமான சேவை வழங்கல் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதில் முக்கியமான முன்னேற்றங்களை அடைந்துள்ளது. டிஜிட்டல் கொள்கை வெளியீடு, மேம்படுத்தப்பட்ட கட்டணத் தளங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி மூலம் செயற்படும் காப்புறுதி உரிமை கோரலுக்கான மதிப்பீடுகள் போன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த திட்டங்கள் யாவும், நெறிப்படுத்தப்பட்ட செயன்முறைகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களை உறுதி செய்து, போட்டிமிக்க காப்புறுதிச் சந்தையில் HNBGI நிறுவனத்தை தனித்துவமாக எடுத்துக் காட்டுகிறது.

Azentio Software நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட Project Phoenix எனும் தனித்துவமான திட்டமானது, டிஜிட்டல் மாற்றத்திற்கான HNBGI இன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த மாற்றத்தை வெளிப்படுத்தும் திட்டமானது, துல்லியம் மற்றும் செயற்பாட்டு செயல்திறனை மேம்படுத்தப்படுத்தும் அதிநவீன Core Insurance System கட்டமைப்பை செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி, புதிய Claimee Health திட்டத்தின் அறிமுகமானது, மருத்துவ காப்புறுதி உரிமைகோரலுக்கான முகாமைத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்துகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையற்ற மற்றும் திறனான காப்புறுதி உரிமைகோரல் செயற்பாட்டு அனுபவத்தை வழங்குகிறது.

வாடிக்கையாளர் அழைப்பு மையம் மற்றும் காப்புறுதி உரிமைகோரல் செயலாக்க சேவைகள் போன்ற முக்கிய செயற்பாட்டு நிலையங்கள் தொடர்பான இறுக்கமான கருத்துக் கணிப்புகளை முன்னெடுத்து, வாடிக்கையாளர் திருப்தி தொடர்பில் வலுவான முக்கியத்துவத்தை HNBGI வழங்குகிறது. இந்த முயற்சிகள் வாடிக்கையாளர் கேள்விகளுக்கு உடனடியான மற்றும் பயனுள்ள தீர்வை வழங்குவதோடு மாத்திரமன்றி, HNBGI இன் நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட நற்பெயரை வலுப்படுத்துகிறது.

HNB General Insurance பற்றி:
HNB பொதுக் காப்புறுதியானது, இலங்கை முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வாகனம் முதல் வாகனம் அல்லாத மற்றும் தக்காபுல் தீர்வுகள் வரை பல்வேறு வகையான காப்புறுதித் தேவைகளை பூர்த்தி செய்கின்ற அர்ப்பணிப்புள்ள பங்காளியாகும். HNB Assurance PLC இன் துணை நிறுவனமமும், HNB குழுமத்தின் ஒரு அங்கத்தவருமான HNB General Insurance ஆனது, பரந்த அளவிலான கிளை வலையமைப்பின் மூலம் செயற்படுவதன் மூலம், நாடு முழுவதும் விரிவான சேவை வழங்கலை உறுதி செய்கிறது. Fitch Ratings Lanka Limited இன் ‘A- (lka)’ இன் காப்புறுதி நிதி வலிமை மதிப்பீட்டின் மூலம், புத்தாக்கம், சிறந்த உபசரிப்புடன், பங்குதாரர்களுக்கு நிலைபேறான மதிப்பை உருவாக்க HNB General Insurance உறுதி பூண்டுள்ளது.

 

Picture caption

HNB பொதுக் காப்புறுதியின் (HNBGI) CEO சித்துமின ஜயசுந்தர மற்றும் HNBGI குழுவினர் விருதுடன்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x